பணியின்போது மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்
1 min read
Head constable suspended for drinking on duty
30.11.2023
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் கிளை ஜெயில் உள்ளது. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு பணியாற்றும் சிறை தலைமைக்காவலர் ஜெயக்குமார் பணியில் இருக்கும் போது மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் மது அருந்திவிட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை தொந்தரவு செய்வதாகவும், அவர்களை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறை தலைமைக்காவலர் ஜெயக்குமார் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சிறை தலைமைக் காவலர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து, வேலூர் மாவட்ட சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.