தென்காசியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு பதிவு முகாம்.
1 min read
Medical Insurance Scheme Special Enrollment Camp in Tenkasi.
3.12.2023
தென்காசியில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சிறப்பு பதிவு முகாம் தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர் சாதிர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமிற்கு தென்காசி நகர் மன்றத் தலைவர் ஆர்.சாதிர் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் கேஎன்எல்.சுப்பையா, நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், தென்காசி தாசில்தார் சுப்பையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த சிறப்பு முகாமில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சேவை வழங்கும் காப்பீட்டு திட்ட அட்டடை பெற தங்களது பெயர்களை பதிவு செய்தனர்
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர திமுக பொருளாளர் அ.சேக்பரீத், மாணவரணி மைதீன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செய்யது ஆபில்,சபரி சங்கர், இசக்கிமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம் தென்காசி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தென்காசி குற்றாலம் சாலையில் உள்ள மீரான் மருத்துவமனை தென்காசி சாந்தி மருத்துவமனை ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி நகராட்சி நிர்வாகம் பொது சுகாதாரத்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.