9-ந் தேதி தென்காசி, மதுரை உள்பட 7 மாவட்டகளுக்கு கன மழைக்கு வாய்ப்பு
1 min read
7 districts including Tenkasi and Madurai are likely to receive heavy rain on 9th
6.12.2023
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற 9ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ நேற்று (டிச.,05) தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே கடந்தது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் டிச.,9ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.