தமிழகத்தில் 44 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை
1 min read
Out of 44 engineering colleges in Tamil Nadu, not a single one got admission
17.12.2023
தமிழகத்தில், 44 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை; 35 கல்லூரிகளில் மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்று தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.