தென்காசி மாவட்டத்தில் வெள்ள சேதங்கள்- அமைச்சர் ஆய்வு
1 min read
Flood Damages in Tenkasi District- Ministerial Survey
18.12.2023
தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்கள் மெயின் அருவி பகுதியில் கனமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்
இந்த ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் .சுன் சோங்கம் ஐடக், தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் .ஈ.ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.