தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது-நிர்மலா சீதாராமன் பேட்டி
1 min read
Tamil Nadu flood cannot be declared a national calamity – Nirmala Sitharaman interview
22.12.2023
சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழை குறித்த எச்சரிக்கையின் அடிப்படையில் அரசு எடுத்த குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ன?
சென்னையில் ரூ.4000 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து முரணான கருத்தை அமைச்சர்கள் கூறினார்கள்.
முதலில் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததாக ஒரு அமைச்சர் கூறினார். பின்னர் 42 சதவீதம் மட்டும் நிறைவு பெற்றதாக மற்றொரு அமைச்சர் கூறுகிறார்.
மழைநீர் வடிகால் பணிகள் 42 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றதாக கூறினார்கள். அதிலும் சந்தேகம்.
மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை வழங்கியது என்ற குற்ச்சாட்டை ஏற்க முடியாது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் உள்ள கருவிகள் அதிநவீனமானவை.
காப்பீட்டு நிறுவனங்கள் கடந்த 19ம் தேதியே சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தின.
4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது தமிழ்நாட்டு முதலமைச்சர் டெல்லியில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் இருந்தார். வெள்ள பாதிப்பின் போது டெல்லியில் இருந்து கொண்டு, மத்திய அரசை குறை கூறுவது நியாயமா?
மத்திய அரசு கொடுத்த நிதியை சரியாக செலவழிக்கவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.
இந்தியாவில் இதற்கு முன்பு எப்போதும் தேசிய பேரிடர் என்ற ஒன்று இதுவரை அறிவிக்கப்பட்டதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.