ஆந்திராவில் சிக்கிய மின்சாரம் பாய்ச்சும் அதிசய மீன்
1 min read
An electrifying miracle fish caught in the sea
24.12.2023
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஜூ பார்க் அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது வலையில் பல வகையான மீன்கள் சிக்கியது.
வலையில் சிக்கிய மீன்களை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து பார்த்தனர்.
வலையில் இருந்த திருகு மீன், சமுத்திர கப்பா ஆகிய 2 வகையான மீன்களைக் கண்டு மீனவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
திருகு மீன் மீனவர்கள் வலையில் சிக்கினால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என்பது ஐதீகம். கடல் ஆழத்தில் வசிக்கும் இவ்வகையான மீன் பெரிய கடல் வாழ் உயிரினங்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்து பாய்ச்சும் என மீன் துறை உதவி இயக்குனர் சீனிவாச ராவ் தெரிவித்தார்.
இதனால் இந்த மீனுக்கு எலக்ட்ரிக் ரே என பெயர் உண்டு. இதன் அறிவியல் பெயர் டர்பிடோ மர்மராடா என தெரிவித்தார்.
வலையில் சிக்கிய மற்றொரு மீனை மீனவர்கள் சமுத்திர கப்பா என அழைக்கின்றனர். இந்த மீனை வலையில் இருந்து மீனவர்கள் எடுத்த போது பலூனை போல உப்பி பயம்புறுத்தியது.
இந்த வகை மீன்கள் எதிரிகளிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள உருவத்தை மாற்றிக் கொள்வதாக தெரிவித்தனர்.