June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

சிவகிரி அருகே வேட்டையாட முயற்சி: 7 பேருக்கு 5.60 லட்சம் அபராதம்

1 min read

5.60 lakh fined on 7 people for poaching wildlife near Sivagiri

24.12.2023
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டினத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 7 பேர்களை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு ரூபாய் 5.60 லட்சம் அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்ட ம் சிவகிரி அருகே தேவிபட்டணம் நாராயணன் மகன் முருகன் என்பவரது கரும்பு தோட்டத்தில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனவிலங்குகளை வேட்டையாட. சிலர் முயற்சித்து வருவதாக திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் சிவகிரி வனச்சரகம் வடக்கு பிரிவு சுனைப்பாறை பீட் வழிவிழி சரகத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்து சிலர் வன விலங்குகளை வேட்டையாட முயற்சிப்பது தெரிய வந்தது.

சிவகிரி ரேஞ்சர் மௌனிகா தலைமையில் வடக்கு ப்பிரிவு வனவர் அசோக்குமார், மற்றும் வனக்காப்பாளர்கள் சன்னாசி, முகமது அலி, கண்ணன்,பாரதி கண்ணன், பெருமாள், அருண் மொழி பிரதீப், மாதிரி பானு, வனக்காவலர்கள் ஆனந்தன், மாரியப்பன், வேட்டை த்தடுப்பு காவலர்கள் பாலசுப்பிர மணியன், சரவணன், யோகநாதன் ஆகியோர் தனிக்குழுவாக சென்று வன விலங்குகளை நாட்டு துப்பாக்கி வைத்து வேட்டையில் ஈடுபட
முயன்ற 7 பேர்களை கைது செய்தனர் .

நாட்டுத் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையிட முயன்று கைது செய்யப் பட்டவர்கள் தேவிபட்டணம் கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் முருகன் (49), விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த பூசைப்பாண்டியன் மகன் சுடலை மாடசாமி (33), இராமர் மகன் ஐயப்பன் (39), லோகிநாதன் மகன் மணிகண்டன் (38), சிவகாமி நாதன் மகன் கோபால் (51), ராமலிங்கம் மகன் சிவகாமி நாதன் (46), தர்மலிங்கம் மகன் மாடசாமி (28) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர் முருகன் உத்தரவின் பேரில் 7 பேருக்கும் தலா ரூ.80 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது,

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.