ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம்: முன்னாள் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
1 min read
Terrorism in Jammu and Kashmir: Former police officer shot dead
24/12/2023
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் கண்ட்முல்லா பகுதியில் உள்ள மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி முகமது ஷபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர்.