சந்திரபாபு நாயுடுவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
1 min read
Prashant Kishore meets Chandrababu Naidu
அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கடந்த ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகம் வகுத்தார். இதில் ஜெகன்மோகன் ரெட்டி மாபெரும் வெற்றி பெற்று முதல் மந்திரியானார்.
இந்த நிலையில் இந்த முறையும் பிரசாந்த் கிஷோர் தான் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொடுப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத விதத்தில் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர்.
அதன் பிறகு இருவரும் ஒரே காரில் சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டிக்கு வெற்றி பாதை அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் இந்த முறை திடீரென தேர்தலுக்கு முன்பாக சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு ஒரு மூத்த தலைவர். அவர் என்னை சந்திக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி அவரை சந்தித்தேன்.
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.