July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

புதிய கொரோனா வைரசுக்கு தடுப்பூசி தேவையில்லை

1 min read

The new coronavirus does not require a vaccine

25.12.2023
இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த சூழலில் புதிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கொரோனா மரபியல் கூட்ட மைப்பின் (இன்சா காக்) தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:-
இந்தியாவில் சுமார் 88 சதவீத மக்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பரவும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. இந்த வகை கொரோனா வைரசால், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். மருத்துவ மனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது.
அதேநேரம், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். எந்த வகையான கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை கண்டறிய சளி மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும். அச்சம்அடைய தேவையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது குளிர்காலம், பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக ஜே.என்.1 வைரஸ் வேகமாக பரவுகிறது. இதன் வீரியம் குறைவாகவே உள்ளது. எனினும் வைரஸ் பரவலை தடுக்க அந்தந்த நாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைசேர்ந்த முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் வெளியிட்ட அறிக்கையில், ‘குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும், மூத்த குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். எக்ஸ் பி.பி.1 வகை வைரசுக்காக தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை ஜே.என்.1 வகை வைரஸ் பரவலை தடுப்பதற்கும் பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.