குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
1 min read
Ayyappa devotees gathered in the shrine
26.12.2023
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் திரளானோர் புனித நீராடினர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அனைத்து அருவிகளில்னலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து 4 நாட்களாக அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறை இருப்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மெயின் அருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் அருவியில் புனித நீராடி குற்றாலநாதர் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். இதனால் அருவிக்கரை மற்றும் கோவில் பகுதியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளிலும் தண்ணீர் வரத்து தாராளமாக இருக்கிறது. இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்று குளித்து மகிழ்ந்தனர்.