அச்சன்கோவில் தேரோட்டம்
1 min read
Achankovil Ayyappan Temple Chariot
26.12.2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோத்சவ திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழக கேரள மாநிலத்தைச் சார்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள அச்சன் கோவிலில் அரசன் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுஸதோறும் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகோற்சவ திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து முதல் மூன்று நாட்கள் உற்சவ வாரி நடைபெற்றது நான்காம் நாளில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது 6 மற்றும் ஏழாம் நாளில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு நெய்யபிஷேகம் சிறப்பு அலங்கார தீபாராதனை அன்னதானம் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
9 ம் நாளான நேற்று தேரோட்ட வைபவம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம், பாகவத பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து ஐய்யப்பன் ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் பிரகார வீதி உலாவாக வந்த சகோவில் முன்பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி ஐயப்பன் எழுந்தருளியதும் தேரோட்டம் துவங்கியது.
அப்போது தேரின் முன்பாக ஐயப்பனின் தங்க வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் அச்சன்கோவில் ஐய்யப்பன்
கோவில் நிர்வாக அதிகாரி துளசிதரன் பிள்ளை, பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு துணை ஆணையர் திலிப், உதவி ஆனையர் மணிகண்டன், அதிகாரி வாசுதேவன் மற்றும் திருஆபரணபெட்டி கமிட்டி தலைவர் தென்காசி ஏசிஎஸ்ஜி ஹரிஹரன் ஆகியோர் சென்றனர்.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுமார் 50 அடி நீளம் கொண்ட மூங்கிலை நான்கு புறமும் கட்டி தேரை இழுத்து நிலையும் கொண்டு வந்து சேர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து
பிற்பகல் ஒரு மணிக்கு கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு நெய் அபிஷேகம் சிறப்பு அலங்கார தீபாராதனை சிறப்பு அன்னதானம் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பனை வழிபட்டனர். அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று 26 ஆம் தேதி காலை ஆராட்டு வைபவமும் அதனைத் தொடர்ந்து நிறைவு விழாவும் நடைபெற்றது.