May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தாழ்த்தப்பட்ட-நரிக்குறவ இன மக்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலம் வழங்கியவர் விஜயகாந்த்

1 min read

It was Vijayakanth who gave 7 acres of land to build a house for the downtrodden

29.12.203
தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. .

தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் வடியவில்லை. அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழை) மதியம் 1-ந் தேதி ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும் லேசான மழை பெய்யும்.

நாளை (30-ந் தேதி) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் உள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் தகவலை தொடர்ந்து 4 மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், முன் எச்சரிக்கை நட வடிக்கையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், அணைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் நிலவுகிறது. ஆனால் அத்தகைய நிலை ஏற்படுமானால் தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

===
தாழ்த்தப்பட்ட-நரிக்குறவ இன மக்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலம் வழங்கியவர் விஜயகாந்த்
29.12.2023
விஜயகாந்த் ஓசைபடாமல் பல உதவிகளை செய்துள்ளார். வீட்டிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் சாப்பாடு கொடுப்பது அவரது வழக்கம்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய ஆலங்குளம் கிராமத்தில் தனது தந்தை அழகர்சாமி, கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து வாங்கிய 7 ஏக்கர் நிலத்தை மகனின் எதிர்காலத்திற்காக வைத்திருந்தார். தந்தையின் மறைவுக்கு பிறகு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருந்த விஜயகாந்த் தனக்கு தந்தை சேர்த்து வைத்திருந்த அந்த நிலத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்க முன்வந்தார்.
அதன்படி இயன்றதை வழங்குவோம், இல்லாதோருக்கு என்பதற்கேற்ப தாழ்த்தப்பட்டோர் மற்றும் நரிக்குறவ இன மக்களுக்கு மட்டும்தான் வழங்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்த விஜயகாந்த் கடந்த 1998-ம் ஆண்டு, தான் நேரடியாக வழங்காமல் அரசு மூலம் வழங்கினார். கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த 7 ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.21 கோடி ஆகும்.

இதன் மூலம் பயனடைந்த அப்பகுதியை சேர்ந்த சோனைமுத்து, துரைப்பாண்டி ஆகியோர் கூறுகையில், கேப்டன் விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை நாங்கள் வீடு கட்டிக்கொள்வதற்காக தானமாக அளித்தார். இன்று அவர் மறைந்தாலும், அவர் எங்களுக்கு இருப்பிடம் தந்து வாழ்வளித்த கடவுளாகவே காட்சி அளிக்கிறார் என்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.