May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவி களுக்கான பேச்சுப்போட்டி

1 min read

Speech competition for Tenkasi district school and college students

30.12.2023
தென்காசி மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவ ,மாணவிகளுக்கும், அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் கவிதை, கட்டுரை பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றாலையும். படைப்பாற்றாலையும் வளர்க்கும் நோக்கில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும். அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் (ம) பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளது.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும். 09.01.2024 அன்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 10.01.2024 அன்றும் காலை 10.00 மணிக்கு தென்காசி இ சிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பெற உள்ளது.

இந்தப் போட்டிகளில் அனைத்து மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளணம்.

ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒருமாணவர் வீதம் மூன்று போட்டிகளுக்கு 03 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் உரிய படிவத்தினை நிறைவு செய்து இப்போட்டி நடைபெறும் நாளில் அரிக்கப்பெற வேண்டும். கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் வீதம் மூன்று போட்டிகளுக்கு 06 மாணவர்கள் கலந்து கொள்ளலாம் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் உரிய படிவத்தினை நிறைவு

செய்து இப்போட்டி நடைபெறும் நாளில் அளிக்கப்பெற வேண்டும். போட்டிக்கான தலைப்பு

போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வழங்கப்படும்.

கவிதை, கட்டுரை பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி

மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000/- மூன்றாம் பரிசு ரூ.5,000/- வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக

இரண்டாம் தளத்தில் செயற்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேசிலோ தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.0462-2502521 தென்காசி மாவட்டத்தில் பள்ளி / கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சிதலைவர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.