சங்கரன்கோவில் அருகே மருமகனை தாக்கிய மாமனார் கைது
1 min read
Father-in-law arrested for assaulting son-in-law near Sankarankoil
3.1.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாறைப்பட்டியில் மருமகனை கல்லால் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு பாறைப்பட்டியில் வசித்து வருபவர் குருசாமி ராஜா இவரது மனைவி கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை பிரிந்து அவரது மாமனாரான கனகராஜ் வீட்டில் வசித்து வருகிறார்.
குருசாமி ராஜா பலமுறை தனது மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை. இந்நிலையில் குருசாமி ராஜா தனது மாமனார் கனகராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருந்த மாமனார் கனகராஜ் அவரது மருமகனான குருசாமி ராஜாவை அசிங்கமாக பேசி கல் மற்றும் கம்பால் தாக்கியதோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து குருசாமி ராஜா திருவேங்கடம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார் . அந்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் தாமரை லிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வடக்கு பாறைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் கனகராஜ் (வயது 51) என்பவரை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து திருவேங்கடம் போலீசார் கனகராஜை சங்கரன்கோவில் திமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் கனகராஜை சிறையில் அடைத்தனர்.