June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரத்தில் கிரிக்கெட் போட்டி

1 min read

Cricket match at Pavurchatra

3.1.2024

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்த தின கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் பரிசு வழங்கி பாராட்டினார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும்,திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, பாவூர்சத்திரத்தில் பிலீவ் கிரிக்கெட் கிளப் சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட நபர்கள் பங்குபெறும் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக் கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கும் கோப்பை மற்றும் பரிசுத்தொகை, நடுவர் மற்றும் சிறந்த வீரர்களுக்கான பரிசுகளை வழங்கி பேசினார்.

இந்த விழாவில் கீழப்பாவூர் மேற்கு ஓன்றிய செயலாளர் க.சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் , மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், பொறியாளர் அணி கபில் தேவதாஸ் ,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, வர்த்தக அணி பத்மநாபன் , இளைஞர் அணி நவீன்கிருஷ்ணா, நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன், ராஜபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
ஏற்பாடுகள கிரிக்கெட் கிளப் அமைப்பாளர் அருண் ,வழக்கறிஞர் ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *