July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

1 min read

Public welfare workers protest in Tenkasi

4.1.2023
தென்காசியில் மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தலைவர் வாசுதேவநல்லூர் ச.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கீழப்பாவூர் எஸ். அருணாசலம் மாவட்ட துணை தலைவர் குருவிகுளம் ஆர்.தர்மராஜ், மேலநீலிதநல்லூர் பி.லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தென்காசி எம்.முத்துசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வே. புதியவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கைகளில் கூறியபடி 19.08.2014 அன்று மக்கள் நலப் பணியாளர்கள் வேலை சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தி அனைவருக்கும் காலமுறை ஊதியத்துடன் நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும்.

பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணம் அடைந்த மக்கள் நலப் பணியாளர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்ப பாதுகாப்பு ரீதியாக ரூபாய் 5 லட்சம் வழங்குவதோடு அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இனியும் தமிழக அரசு தாமதித்தால் வரும் ஜனவரி 31 அன்று சென்னை பனகல் மாளிகை முன்பு 10 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களும் திரண்டு வந்து எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்று பேசினார்.

மக்கள் நல பணியாளர்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர், மற்றும் தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் க.துரைசிங், பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் வே. வெங்கடேஷ், தமிழ்நாடு வேலைவாய்ப்புத்துறை ஊழியர் சங்கத்தில் மாநில பொதுச் செயலாளர் மார்த்தாண்ட பூபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மு திருமலை முருகன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் பி.கே.மாடசாமி, நெல்லை மண்டல செயலாளர் தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கத்தின் நெல்லை மண்டல செயலாளர் த.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர்கள் கடையநல்லூர் கருப்பசாமி, மு திராவிட மணி, சங்கரன் கோவில் சண்முகச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் தென்காசி ச.அந்தோணி செல்லத்துரைச்சி, கடையநல்லூர்
த.ராஜேந்திரன், சங்கரன்கோவில்
வி.மாரியப்பன், தென்காசி முத்துக்குமார், குருவிகுளம் சுந்தரராஜன், செங்கோட்டை சே.பண்டாரசிவன் உட்பட 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள அனைத்து ஆண் பெண் மக்கள் நல பணியாளர்களும் கலந்து கொண்டனர். முடிவில் கடையநல்லூர் மக்கள் நலப் பணியாளர் தமிழ்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.