அயோத்தி கும்பாபிஷேகம்- மோடி 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார்
1 min read
Ayodhya Kumbabhishekam- Modi has started an 11-day fast
12.1.2024
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேக விழாவிற்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில், 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளேன் என பிரதமர் மோடி ஆடியோ வெளியிட்டுள்ளார்.
PauseMute
Loaded: 3.62%
Fullscreen
அந்த வீடியோவில் பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது:-
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் உள்ளன. இந்த புனிதமான விழாவில் நான் இருப்பது அதிர்ஷ்டம். இந்த கும்பாபிஷேகத்தின்போது நாட்டின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னை உருவாக்கியுள்ளார். இதை மனதில் வைத்து 11 நாள் சிறப்பு விரதத்தை தொடங்கியுள்ளேன்.
நான் உணர்ச்சிவசப் படுகிறேன். என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற உணர்வை அனுபவிப்பது இதுவே முதல்முறை. இந்த நேரத்தில் ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்துவது கடினம். ஆனால், நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். மக்களிடம் இருந்து ஆசீர்வாதத்தை நாடுகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி ஆடியோவில் தெரிவித்துள்ளார்.