May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

வெளிநாடுகளில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு குவியும் பரிசு பொருள்கள்

1 min read

Gifts from abroad to Ayodhya Ram temple

12/1/2024
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ம் தேதி நடைபெறவுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பரிசுப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

ராமர் கோவில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஆயிரக்கணக்கான பரிசு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.குறிப்பாக, சீதையின் பிறந்த மண்ணாக கருதப்படும் நேபாளத்தின் ஜனக்புரி ஜானகி கோயிலில் இருந்து 30 வாகனங்களில் 3,000 வகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்கம், வெள்ளியில் தயாரான பாதுகைகள், கண்கவர் துணிகள், ஆபரணங்கள் உள்ளன.
சீதை சிறை வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் இலங்கையில் இருந்து பெரிய வடிவிலான பாறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாறையில் சீதை சிறை வைக்கப்பட்ட காட்சிகள் ஓவியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் வதோதராவில் இருந்து 108 அடி நீளத்தில் தூபம் போடுவதற்கான குச்சிகள் வந்துள்ளன. தூபம் போடும்போது எழும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் இந்த குச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குஜராத் பாஜக அரசு சார்பில் 44 அடி உயர பித்தளை கொடிக் கம்பம், 6 சிறிய கொடிக் கம்பங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகர் அருகிலுள்ள எட்டாவில் இருந்து 2 ஆயிரத்து 100 கிலோ எடைகொண்ட ராட்சத கோயில் மணி தயாரிக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் லக்னோவில் இருந்து அலோக்குமார் சாஹு என்ற காய்கறி வியாபாரி வித்தியாசமான கடிகாரம் அனுப்பி உள்ளார். அயோத்திக்காக 2018-ல்தயாரித்த இந்தக் கடிகாரத்திற்கு அலோக் குமார், இந்திய அரசின் காப்புரிமையை பெற்றுள்ளார். சூரத் வைர வியாபாரி ஒருவர் 5 ஆயிரம் அமெரிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட ராமர் கோவில் வடிவிலான வெள்ளி ஆபரணத்தை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.