June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆபாச படம் பார்த்தவர் மீதான வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்தது

1 min read

High Court quashed the case against the person who watched the pornographic film

12.1.2024
சென்னையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் வந்தது.
நீதிமன்றத்தில் ஆஜரான இளைஞர் ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.
மேலும், ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் இளைஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின்போது, “ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல. மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம்” என நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.
மேலும், “90’s கிட்ஸ் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்” என்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.