2023-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப.வீரபாண்டியன் தேர்வு
1 min read
Suba Veerapandian selected for Father Periyar Award for 2023
12.1.2024
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்கி வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2023-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2023-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்