ராமர் கோவில் கும்பாபிஷேக விரதம்- தரையில் படுத்துறங்கும் பிரதமர் மோடி
1 min read
Ram Temple Kumbabhishekam – Prime Minister Modi lying on the ground due to fasting
19.1.2024
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார். இதற்காக பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக விரதம் இருக்க துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அவர் நாடு முழுக்க பல்வேறு கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 11 நாட்கள் விரதம் இருக்கும் பிரதமர் மோடி தனது உணவில் வெங்காயம், பூண்டு மற்றும் பல்வேறு பொருட்களை சேர்த்துக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதவிர பிரதமர் மோடி போர்வையை மட்டும் வைத்துக் கொண்டு இரவில் தரையில் படுத்து உறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவர் தேங்காய் தண்ணீரை மட்டுமே குடித்து வருவதாக கூறப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் ஜனவரி 12-ம் தேதி துவங்கி தினமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஜனவரி 22-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.