தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கவர்னர் பதவியை எதிராக தீர்மானம்
1 min read
DMK Resolution against Governorship in Youth Conference
21.1.2024
தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
மாநாட்டில் மொழிப்போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இளைஞரணி மாநாட்டில் இளைஞரணி செயலாளரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டலின் தீர்மானங்களை வாசித்தார். அந்த தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு-
- மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி
- வரலாறு காணாத மழை நேரத்தில் மக்களை காத்த முதல்வருக்கு நன்றி
- நான் முதல்வன், புதுமை பெண் திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அளித்த முதல்வருக்கு நன்றி
- வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.6000 வழங்கிய முதல்வருக்கு நன்றி
- நீட் நுழைவு தேர்வை ஒழிக்கும் வரை தி.மு.க. போராட்டம் ஓயாது.
- கவர்னர் பதவியை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை
- மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வேண்டும்.
- மாநில சுய ஆட்சி அடிப்படையில் மாநில அரசின் அதிகாரத்தை வலிமைப்படுத்த வேண்டும்.
- பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் ரெய்டுகளுக்கு கண்டனம்.
- ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
- குலக்கல்வியை எதிர்த்து இளைஞரணி போராட்டம் தொடரும்
- பல்கலைக்கழக வேந்தராக கவர்னருக்கு பதில் முதலமைச்சர் செயல்பட வேண்டும்.
- மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.