June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தனுஷ்கோடியில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

1 min read

Prime Minister Modi performed puja at Dhanushkodi

21/1/2024
ஆன்மிக சுற்றுப்பயணமாக 3 நாள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து இரவில் ராமேசுவரம் கோவில் மேற்கு ரத வீதியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கினார்.

இந்நிலையில் இன்று காலை தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார்.

தொடர்ந்து அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்ட அவர் அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வண்ண மலர்களை தூவி கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

இதையடுத்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கு பூஜை செய்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.