சங்கரன்கோவிலில் பாஜக தேர்தல் பயிலரங்கம்
1 min read
BJP election workshop at Shankaran temple
19.2.2024
தென்காசி நாடாளுமன்ற தொகுதி பாஜக தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயில ரங்கம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். தென்காசி நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் அ.ஆனந்தன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாஜ மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி கலந்துகொண்டு பேசுகை யில், நாடாளுமன்ற தேர்த லுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. தேர்தல் அறிவித்து விட்டால் நாம் எந்தப் பணிகளையும் செய்ய முடியாது. பிரசாரம் மட்டும் தான் செய்ய முடியும். பிரசாரங்களை கட்டமைப் பதற்காக பாஜ 32 விதமான மேலாண்மை குழுக்களை அமைத்து இருக்கிறது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நிச்சயமாக பாஜ வேட்பாளர் தான் போட் டியிடுகிறார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய வாய்ப்பு உள் ளது. இந்த பகுதி கனிம வளங்களும். இயற்கை வளங்களும் நிறைந்த நீர்வ ளம் மிக்க பகுதியாகும். இதனை பயன்படுத்தி விவசாயத்தைப் பெருக்கி மக்களின் பொருளாதா ரத்தை உயர்த்த இதுவரை பதவியில் இருந்தவர்கள் ஏற்பாடு செய்யவில்லை. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்த தொகுதியில் வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் அமைச்சர் ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி எங்கே இருக்கிறது என்று கேட்டவர்கள் மத்தியில் தென்காசி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்று பேசினார்.
இந்த பயிலரங்க நிகழ்ச்சியில் பாஜக மாவட் டச் செயலாளர் சுப்பிரம ணியன், மாவட்ட பார் வையாளர் மகாராஜன், பார்லி., தொகுதி துணை அமைப்பாளர் ராதாகிருஷ் ணன், விருதுநகர் மாவட்ட தலைவர் ராஜா, விருதுநகர் மாவட்ட பொதுச் செயலாளர் தங்கராஜ், போத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.