June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் தமிழ்நாடு – கேரளா போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

1 min read

amil Nadu-Kerala Police Officers Consultation Meeting at Courtalam

19.2.2024
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு கேரள மாநில காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான அறிவிப்பு இன் னும் சில தினங்களில் இந் திய தேர்தல் ஆணையம் வெளியிடப்பட உள்ள சூழலில், அதற்கான பல்வேறு ஆயத்த பணிகளில் அனைத்து துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நிலையில், தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு, கேரளா மாநில போலீசார் ஒன்றிணைந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடை பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் இரு மாநிலங் களில் உள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் உள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. பி.சுரேஷ்குமார், கொல்லம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சாபுமேத்யூ, தலைமையில் நடை பெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத் தில் புனலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்டுவேர்ட் கீலர், தென்காசி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர், தென்மலை. இன்ஸ்பெக்டர் அஜய்குமார், அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில காவல் துறையினர் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப் பட்டது.

மேலும் தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதி வழியாக அவ்வப்போது நடைபெற்று வரும் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் கடத்தல் சம்பவங்களை முழுமையாக தடுப்பது குறித்தும் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *