கடையநல்லூர் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்டவர் கைது
1 min read
Kadayanallur woman’s photo posted obscenely on social media arrested
21.2.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்த பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக வெளியிட்ட நாகப்பட்டினத்தை சார்ந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கிருஷ்ணா புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் அடையாளம் தெரியாத நபர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருவதாகவும், இதை தடுத்து புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் உத்தரவு படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் வழிகாட்டுதலின் பேரில் காவல் ஆய்வாளர் வசந்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன் காவலர்கள் கருப்பசாமி வசந்த் முப்புடாதி வசந்த் குமார் மாரியம்மாள் ராமலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நாகை மாவட்டம் சமரசம் நகர் பகுதியில் சார்ந்த முகமது சுலைமான் என்பவரது மகன் ஹாஜி முஹம்மது வயது 23 என்பவரை கைது செய்தனர். அவர் அங்குள்ள பல ஜூஸ் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று ஷாஜி முகமதுவை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
மேலும் குற்றத்திற்கு பயன்படுத்திய ஆன்ட்ராய்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.