தென்காசி தொகுதியில் போட்டியிட மா.செல்லத்துரை விருப்ப மனு
1 min read
M.Chellathurai’s nomination petition to contest in Tenkasi Constituency
21.2.2024
தென்காசி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மா.செல்லத்துரை விருப்பம் தெரிவித்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெற்றுக்கொண்டார்.
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பம் மனு விநியோகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மா. செல்லத்துரை அண்ணா அறிவாலயத்தில் தனது விருப்பம் மனுவை பெற்றுக் கொண்டுள்ளார்.அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.