தென்காசி சிறுவன் ஸ்கேட்டிங் உலகசாதனை
1 min read
Tenkasi boy skates world record
21.2.2024
தென்காசியில் ஸ்கேட்டிங் மூலம் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன் மகாதேவ் யாதவ் க்கு மூத்தோர் மன்றம் சார்பில் அதன் தலைவர் எம்.ஆர். அழகராஜா பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார்.
தென்காசி மூத்தோர் மன்ற பிப்ரவரி மாத செயற்குழு கூட்டம் திருவள்ளுவர் கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மூத்தோர் மன்றத்தின் தலைவர் அழகராஜா தலைமை தாங்கினார். துரைராஜ் இறைவணக்கம் பாடினார்.பொறியாளர் முத்துசாமி பிறந்த நாள் வாழ்த்து கூறினார், மூத்தோர் மன்றத்தின் செயலாளர் இராமலிங்கம் கடந்த மாத அறிக்கையையும் மூத்தோர் மன்றத்தின் பொருளாளர் நல்லாசிரியர் கை.கணேசமூர்த்தி கடந்த மாத வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மீரான் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ் முதியோர்கள் பின்பற்ற வேண்டிய மருத்துவ அறிவுரைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஸ்கேட்டிங் கில் உலக சாதனை முயற்சி 12 கி.மீ தொடர்ச்சியாக ஓடி சாதனை செய்த தென்காசி கார்த்திக் – கார்த்திகா தம்பதியரின் 4 வயது மகன் மகாதேவ் யாதவ் வை தென்காசி மூத்தோர் மன்றம் பாராட்டி கௌரவம் செய்தது. தென்காசி அஞ்சல்துறை அதிகாரி ராமசாமி சேமிப்பு பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.
தென்காசி திருவள்ளுவர் கழக அவைப்புலவர் கா.சா. பழனியப்பன் மானம் என்ற தலைப்பில் விரிவுரை யாற்றினார். முடிவில் கிருஷ்ணன் நன்றி உரை ஆற்றினார்.இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தென்காசி மூத்தோர் மன்றத்தின் தலைவர் அழகர் ராஜா ,செயலர் இராமலிங்கம், பொருளாளர் கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.