மணிப்பூர் கலவரம்: உயர்நீதிமன்றம் உத்தரவை திரும்ப பெற்றது
1 min read
Manipur Riots: High Court Reverses Order
22.2.2024
மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது மணிப்பூர் உயர்நீதிமன்றம்.
2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு மணிப்பூரில் மேய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கின் தீர்ப்பில், தனது உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.