சிவகிரியில் 2 வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
1 min read
Mother commits suicide by jumping into well with 2-year-old son in Sivagiri
22/2/2024
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குடும்பத் தகராறில் 2 வயது குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் தேவர் மணல் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மாரி யப்பன் (வயது 25). மினிவேன் வைத்து ஓட்டி வருகிறார்.
இவரது மனைவி காளீஸ்வரி (21). இவர்களுக்கு இரண்டு வயதில் கவிபிரசாத் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் காளீஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
மாரியப்பன் வேறு ஒரு பெண்ணிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று காலையில் மாரியப்பன் அந்த பெண்ணிடம் செல் போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதை அவரது மனைவி காளீஸ்வரி கண்டித்தார். இத னால் ஏற்பட்ட தகராறு கார ணமாக மாரியப்பன். காளீஸ்வரியை வீட்டை விட்டு வெளியே போகும்படி கூறினார். பின்னர் மாரியப் பன் வெளியே சென்றுவிட்டார்.
இந்த சம்பவத்தால் விரக்தி அடைந்த காளீஸ்வரி, தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். ஊருக்கு அருகில் பேச்சியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள கிணற்றில் தனது குழந்தையுடன் காளீஸ்வரி குதித்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கிய தாயும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர்.
வீட்டை விட்டு குழந்தையுடன் சென்ற காளீஸ்வரி வெகு நேரமாகியும் திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் மற்றும், உறவினர்கள் பல்வேறு இடங் களில் தேடினார்கள். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று ஊருக்கு அருகில உள்ள கிணற்றில் தண்ணீரில் குழந்தை கவிபிரசாத் உடல் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காளீஸ்வரியின் காலணியும் அந்த பகுதியில் கிடந்ததால் அவரும் கிணற்றில் மூழ்கி இருப்பார் என்று அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வாசுதேவநல்லூர் தீய ணைப்பு துறையினருக்கு. தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கருப்பையா தலைமையில் அலுவலர் (பொறுப்பு) முருகன், சிறப்புநிலை அலுவலர் மாடசாமி ராசா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற னர். கிணற்றில் இறங்கி தண் ணீரில் மிதந்த குழந்தை உடலை மீட்டனர்.
பின்னர் நீண்ட நேரம் போராடி.கிணற்றின் அடியில் தண்ணீரில் மூழ்கி கிடந்த காளீஸ்வரியின் உடலை மீட்டு சுயிறு மூலம் மேலே கொண்டு வந்தனர்.
மேலும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட் சுமி தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர்கள் ஆறுமுகசாமி. நவமணி, மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளீஸ்வரி, கவி பிரசாத் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை யங்கோட்டை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காளீஸ்வரியின் தந்தை முருகன் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகிரி அருகே குடும்ப தக ராறில் இரண்டு வயது குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.