விஜய்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முகவரி தமிழகத்திற்கு மாற்றம்
1 min read
Vijay Party General Secretary Pushsi Anand’s address has been changed to Tamil Nadu
23.2.2024
விஜய் ரசிகர் மன்றத்தில் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் புஸ்சி ஆனந்த். இவர் புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் இயக்க பணிகளை தீவிரப்படுத்தினார். மக்கள் இயக்கத்தின் மூலம் நடைபெற்ற அன்னதானம், பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார்.
தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையொட்டி புதுச்சேரியில் தனது வாக்காளர் அட்டை முகவரியை வைத்திருந்த புஸ்சி ஆனந்த் கட்சி பணிகளுக்காக தற்போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் முகவரிக்கு மாற்றியுள்ளார்.
பிரபல உலக தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்
புதுடெல்லி:
உலகளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக் கணிப்பை மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில், மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை ஒரு வார காலம் நடத்தியது.
இதில் இந்திய பிரதமர் மோடிக்கு 78 சதவீதம் பேர் ஆதரவு அளித்திருந்தனர். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசுக்கு 65 சதவீதம் பேர் ஆதரவளித்ததால் 2-ம் இடம் பிடித்தார்.
அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே 63 சதவீதம் பேர் 3-ம் இடத்திலும், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 52 சதவீதத்துடன் 4-ம் இடத்திலும், சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் 51 சதவீதத்துடன் 5-ம் இடத்திலும் உள்ளார்.
பிரேசில் அதிபர் டி சில்வா 6-ம் இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசி 7-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 8-ம் இடத்திலும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 9-ம் இடத்திலும், பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு 10-ம் இடத்திலும் உள்ளார்.