அசாமில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து
1 min read
Repeal of Muslim Marriage and Divorce Registration Act in Assam
24.2.2024
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யப் போவதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் பா.ஜ., ஈடுபட்டு வருகிறது. இதற்காக மக்களிடம் மத்திய அரசு கருத்து கேட்ட நிலையில், உத்தரகண்டில் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக அசாம் அரசும் இதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்ய அசாம் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நேற்று இரவு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அசாம் மாநில அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பல முறை பொது சிவில் சட்டம் ஒரு பகுதியாக ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் , 1935 ரத்து செய்யப்படுகிறது. இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து அந்தச் சட்டத்தின் கீழ் பதியப்படாது. மாறாக சிறப்புத் திருமணங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைத் திருமணங்கள் குறையும். இதுவரை மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்து வந்த 94 பதிவர்களுக்கு சிறப்பு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்த மசோதா விரைவில் அசாம் சட்டசபையில் தாக்கலாகும் எனத் தெரிகிறது.