மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min readM. K. Stalin inaugurated the Karunanidhi Memorial at the Marina
26.2.2024
சென்னை மெரினா கடற்கரையில், 15 அடி ஆழத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள, கருணாநிதி நினைவிடம் இன்று திறக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில், ரூ.39 கோடி ரூபாயில், நினைவிட கட்டுமான பணிகளை, 2022 ஜனவரியில் பொதுப்பணித்துறை துவக்கியது. தற்போது, கட்டுமான பணிகள் முடிந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, கருணாநிதி நினைவிட முகப்பில், அண்ணாதுரை நினைவிடமும், அருங்காட்சியகமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இவற்றை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளையும் திறந்து வைத்து மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் “உலகம் அருங்காட்சியகம்”: நினைவிடத்தைச் சுற்றிலும் கருணாநிதியின் பொன்மொழிகள்; கருணாநிதி பேசுவது போல் 3டி காட்சி அமைப்பு.
நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி, அமைச்சர்கள், சேகர்பாபு, எ.வ. வேலு, வைகோ, கவிஞர் வைரமுத்து, சென்னை மேயர் பிரியா, தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா. மற்றும் முக்கிய அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.