இமாச்சல்லில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் தகுதி நீக்கம்
1 min read6 disaffected Congress MLAs disqualified in Himachal
29.2.2024
ஹிமாச்சல பிரதேசத்தில் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 6 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு நடந்த தேர்தலால் அங்கு பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள், தேர்தலில் அணி மாறி பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டது தெரியவந்தது. இதனையடுத்து அம்மாநில அரசு பெரும்பான்மை இழந்ததாக பா.ஜ., குற்றம்சாட்டியது. கவர்னரிடம் அக்கட்சி மனு அளித்து உள்ளது.
இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா கூறுகையில், ‛‛ காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 6 பேர், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சிக்கி உள்ளது உறுதியாகி உள்ளது. அந்த 6 பேரும் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து உடனடியாக நீக்குவதாக அறிவிக்கிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்து, ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.