தமிழகத்திற்கு வரி பகிர்வு நிதி ரூ.5,797 கோடி ஒதுக்கியது மத்திய அரசு
1 min read
The central government allocated Rs 5,797 crore as tax sharing fund to Tamil Nadu
1.3.2024
வரி பகிர்வு நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடி ஒதுக்கி உள்ளது மத்திய அரசு.
இது குறித்து கூறப்படுவதாவது: நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான 3வது தவணை நிதியை ஒதுக்கியது மத்திய அரசு . அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,42,122கோடியை ஒதுக்கி உள்ளது. வரி பகிர்வு நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியை ஒதுக்கி உள்ளது மத்திய அரசு.
உ..பி.,க்கு ரூ.25,495 கோடி பீகாருக்கு14,295 கோடி, ம.பி.,க்கு ரூ.11,157 கோடி, மே.வங்கம் ரூ.10,692 கோடி, மஹாராஷ்டிரா ரூ. 8,978 கோடி , ராஜஸ்தான் ரூ.8,564 கோடி,ஒடிசா ரூ.6,435 கோடி, தமிழ்நாடு ரூ.5,797 கோடி, ஆந்திரா மாநிலம் ரூ.5,752 கோடி, கர்நாடகா ரூ 5,183 கோடி, குஜராத் ரூ.4,943 கோடி, சட்டீஸ்கர் ரூ.4,842 கோடி, ஜார்கண்ட் ரூ.4,700, அசாம் ரூ.4,446 கோடி, தெலங்கானா ரூ.2,987 கோடி,கேரளா ரூ.2,736 கோடி,பஞ்சாப் ரூ.2,568 கோடி ,அருணாசல பிரதேசம் ரூ.2,497 கோடி, உத்தர்கண்ட் ரூ.1,589 கோடி, அரியானா ரூ. 1,553 கோடி, இமாச்சல் பிரதேசம் ரூ.1,180 கோடி, மேகாலயா ரூ.1,090 கோடி, மணிப்பூர் ரூ.1018 கோடி,திரிபுரா ரூ.1,006 கோடி, நாகலாந்து ரூ.809 கோடி, மிசோரம் ரூ.711 கோடி, சிக்கிம் ரூ.551 கோடி , கோவா ரூ.549 கோடி என்பன உட்பட மொத்தம் ரூ.1,42,122 கோடி ஒதுக்கி உள்ளது.