புற்று நோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி
1 min read
Recovered from cancer: ISRO chief Somnath
4.3.2024
“ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட்ட தினத்தில் தனக்கு வயிற்று பகுதியில் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது குணம் ஆகிவிட்டேன்” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
இது குறித்து சோம்நாத் கூறியிருப்பதாவது:-
ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் தனக்கு வயிற்று பகுதியில் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.
சந்திரயான்- 3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்த நாளில் உடலில் சில பிரச்னைகள் இருந்ததை உணர்ந்தேன். தற்போது, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன். தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு மருத்துவமனையில் தங்கி 4 நாட்கள் சிகிச்சை எடுத்துள்ளார்.