பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்
1 min read
BJP election manifesto preparation advisory meeting
11.3.2024
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தென்காசி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற தென்காசி பாராளுமன்ற மையக்குழு மற்றும் சட்டமன்ற மையக்குழு பங்கேற்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு சிறப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி பாராளுமன்ற பாஜக அமைப்பாளர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் கிருஷ்ணன், தென்காசி பாராளுமன்ற பொறுப்பாளர் மகாராஜன் இணை பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை (எ) ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பாஜக பொதுச் செயலாளர்கள்
பாலகுருநாதன், ராமநாதன், மாவட்ட துணைத் தலைவர் பால ஸ்ரீனிவாசன், பாஜக மாவட்ட செயலாளர்கள் ராஜலட்சுமி,சுப்பிரமணியன், அர்ஜுனன், உள்ளிட்ட மண்டல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், பொதுமக்களின் கோரிக்கைகள், ஆகியவை பற்றி விவாதித்து தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் சங்கரன்கோவில் நகர பாஜக தலைவர் கணேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.