June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்-100 பேர் கைது

1 min read

Farmers rail strike in Tenkasi-100 people arrested

11.3.2024
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ரயில் மறியல் போராட்டமானது நடைபெற்று வருகிறது.

அதன்படி தென்காசி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நெல்லை மண்டல தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த ரயில் மறியல் போராட்டத்தில், தென்காசி மாவட்ட செயலாளர் மகாலிங்கம் மற்றும் நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன், செயலாளர் ஆப்ரகாம், பொருளாளர் சேகர், ஊத்துமலை கருப்பசாமி, கண்ணன், அழகியபாண்டியபுரம் சீவலபெரியான், புளியரை சுப்பையாத்தேவர், சிதம்பரம், மாரியப்பன், கண்ணன், சரஸ்வதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்து, அருகாமையில் உள்ள சமூக நல கூடத்தில் அடைத்து வைத்தனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் இந்த ரயில் மறியல் போராட்டத்தால் தென்காசி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *