பாவூர்சத்திரம் பகுதியில்ரூ.15 லட்சம் செலவில் தார்ச்சாலை பணிகள் ஆய்வு
1 min read
Inspection of tar road works in Bhavoorchatram area at a cost of Rs.15 lakhs
17.3.2024
தென்காசி மாவட்டம்
பாவூர்சத்திரத்தில் ரூ.15 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்ம நாதன், மற்றும் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சிக்குட்பட்ட பாவூர்சத்திரம் ஆதித்தனார் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சியளித்தது. வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்த இச்சாலையினை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் தார் சாலை அமைத்திட ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தினை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது தார்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை நேற்று முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.