தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார்
1 min read
DMK candidate for Tenkasi Constituency Dr. Rani Sreekumar
20-3.2024
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தி,க.வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் சுய விபரம் வருமாறு:
பெயர்- டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்பிபிஎஸ்.,எம்டி.,
பிறந்த தேதி – 11.05.1983
வயது- 40,
தொழில்- அரசு மருத்துவர் (மயக்கவியல் பிரிவு), அரசு மருத்துவமனை, சங்கரன்கோவில்.
மாத வருமானம்- ரூ.1.27 லட்சம்
கட்சி பொறுப்பு- 2002முதல் திமுக உறுப்பினர்
முகவரி- 5ஃ1148ஜி-, கோமதி சங்கர் காலனி, சங்கரன்கோவில்.
கணவர் பெயர்- கோ.ஸ்ரீகுமார்
கணவர் தொழில்- அரசு ஒப்பந்தக்காரர்
குழந்தை- மகள் ஸ்ரீநிதி (10ம் வகுப்பு)
தந்தை- சிவக்குமார் (வயது 81), ஓய்வு பெற்ற எழுத்தர், திமுக ஒன்றிய பிரதிநிதி.
தாய்- க.செல்வமணி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியை.
சகோதரி- எஸ்.ஜான்சிராணி.
டாக்டர் ராணி ஸ்ரீகுமாரின் பெரியப்பா பே.துரைராஜ் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.