தென்காசி தொகுதியில் பறக்கும் படையினரிடம் ரூ. 2.12 லட்சம் சிக்கியது
1 min read
To the Flying Soldiers in Tenkasi Constituency Rs. 2.12 lakh was caught
20.3.2024
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியரை மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 2.12 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நன் னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதி கிடை யாது அவ்வாறு கூடுதலாக பணத்தை கொண்டு சென் றால் அதற்கான ஆவணங் களை முறையாக வைத் திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏற்க னவே தெரிவித்துள்ளது.
மேலும் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் கொண்டுசெல்லப்ப டுகிறதா என்பதை கண்கா ணிக்க தென்காசி மாவட் டத்தில் அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் இரவும் பகலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட் பட்ட புளியரை சோதனை சாவடியில் தேர்தல் பறக் கும் படை அதிகாரியான பிடிஓ முருகேசன் தலைமையில், சிறப்பு எஸ்ஐ மாரியப்பன், காவலர்கள் ராஜகோபால், மாரிமுத்து, சிவசுப்பிரமணி யன் ஆகி யோர் கொண்ட பறக்கும் படையினர் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது புனலூர் மஞ்சமோன் கலா, ஏழு விழா வீடு பகுதியைச் சேர்ந்த ஜானின் மகன் அனூப் வர்கீஸ் (35) என்பவர் தனது காரில் கடையம் மாட்டுச்சந்தையில் மாடு வாங்க சென்றார். ஆனால் அங்கு மாட்டின் விலை அதிகமாக இருந்ததால் மாடு வாங்காமல் அதே காரில் கோனத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது புளியரை சோதனை சாவடி அருகே இவரது காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்சத்து 12,500 காரில் கொண்டு வந்தது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து அந்த தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கடையநல்லூர் தாசில்தார் தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான சுடலை பணியிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் மறுக்காலன்குளம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தாசில்தார் பாபு தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனைகள் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள் பட்டி பகுதியைச் சார்ந்த சந்திரசேகர் என்பவர் மகன் மலர் வயது 33 என்பவரது காரை வழிமறித்து சோதனை செய்தனர் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் ஒரு லட்சம் இருந்தது தெரிய வந்தது.பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தை சங்கரன் கோயில் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.