April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

பா.ஜனதா வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் நடிகை ராதிகா போட்டி

1 min read

BJP candidate list: Actress Radhika Botti in Virudhunagar

22.3.2024
தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. அந்த வகையில், 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்று அண்ணாமலை இன்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் பட்டியலை இரண்டாம் கட்டமாக அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:

1) திருவள்ளூர் (தனி) – வி.பாலகணபதி

2) வடசென்னை – பால் கனகராஜ்

3) திருவண்ணாமலை – அஸ்வத்தாமன்

4) மதுரை – ராம ஸ்ரீநிவாசன்

5) தஞ்சை – எம்.முருகானந்தம்

6) தென்காசி (தனி) – ஜான் பாண்டியன்

7) சிவகங்கை – தேவநாதன் யாதவ் (தாமரை சின்னத்தில் போட்டி)
8) கரூர் – வி.வி.செந்தில்நாதன்

9) சிதம்பரம் (தனி) – பி.கார்த்தியாயினி

10) நாகை (தனி) – எஸ்.ஜி.எம். ரமேஷ்

11) நாமக்கல் – கே.பி.ராமலிங்கம்

12) திருப்பூர் – ஏ.பி. முருகானந்தம்

13) பொள்ளாச்சி – கே.வசந்தராஜன்

14) விருதுநகர் – ராதிகா சரத்குமார்

15) புதுவை – நமசிவாயம்
விருதுநகர் மக்களவைத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். கணவர் சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியுடன் பா.ஜ.க.,வில் இணைந்த ராதிகாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்களவைத்தேர்தலில் 3 பெண் வேட்பாளர்களை பா.ஜ.க. களமிறக்கி உள்ளது.

தென்சென்னை – தமிழிசை சவுந்தரராஜன்

விருதுநகர் – ராதிகா சரத்குமார்

சிதம்பரம் (தனி) பி.கார்த்தியாயினி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.