April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் யூடியூப் விதிமுறைகளை மீறிய 22.5 லட்சம் வீடியோக்கள் நீக்கம்

1 min read

22.5 Lakh Videos Violating YouTube Rules In India Removed

27.3.2024
இந்தியாவில் யூடியூப் விதிமுறைகளை மீறியதாக கூறி 22.5 லட்சம் வீடியோக்களை அந்த நிறுவனம் நீக்கி உள்ளது.

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல வீடியோ சமூக வலைதளம் யூடியூப். அதில் பொழுதை போக்கவும், வருமானத்தை ஈட்டவும் பலர் சேனல் துவக்கி பல வீடியோகளை பதிவிடுகின்றனர். அப்படி பதிவேற்றும் வீடியோக்கள் அனைத்தும் தங்களது விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் என யூடியூப் கூறுகிறது. அதனை மீறும் வீடியோக்கள் நீக்கப்படுவதுடன் சேனல்களை அந்த நிறுவனம் முடக்கி வருகிறது.அந்த வகையில் 2023-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் விதிமுறைகளை மீறியதாக இந்தியாவில் மட்டும் 22.5 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன. விதிமுறைகளை மீறும் வகையில் விளம்பரம் அல்லது பாலியல் ரீதியிலான கருத்துகளுடன் உள்ளதால் அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன.அதேபோல் உலகளவில் 90 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன. அதில், 96 சதவீத வீடியோக்கள் யாரும் பார்ப்பதற்கு முன்னரே நீக்கப்பட்டன. மேலும் விதிகளை மீறியதாக 2 கோடி சேனல்கள் நீக்கப்பட்டு உள்ளதுடன் 100 கோடி வாசகர்கள் கருத்துகளையும் அந்த நிறுவனம் நீக்கி உள்ளது.

வீடியோக்கள் நீக்கப்பட்ட பட்டியலில்,இந்தியா முதலிடத்தில் உள்ளது. ( 22.5 லட்சம் வீடியோக்கள் நீக்கம்).அடுத்த இடத்தில் சிங்கப்பூர் ( 12,43,871 வீடியோக்கள் நீக்கம்).3-வது இடத்தில் அமெரிக்கா ( 7,88,354 வீடியோக்கள் நீக்கம்).இந்தோனேஷியா 4-வது இடத்தில் (7,70,157 வீடியோக்கள் நீக்கம்).ரஷ்யா 5-வது இடத்தில் (5,16,629 வீடியோக்கள் நீக்கம்) உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.