November 9, 2024

Seithi Saral

Tamil News Channel

சேத்துப்பட்டு அருகே சாலை விபத்துகளில் 5 பேர் பலி

1 min read

5 killed in road accidents near Sethupattu

27.3.2024
விழுப்புரம்-ஆரணி சாலையில் சேத்துப்பட்டு அருகே தத்தனூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செஞ்சி அடுத்த பெரியகரம் கிராமத்தை சேர்ந்த கணவன்-மனைவி குலதெய்வம் சாமி கும்பிட இரு சக்கர வாகனத்தில் வந்த போது கார் மோதி பலத்த காயமடைந்த நிலையில் சசிகுமார் அவருடைய மனைவி மகாலட்சுமி பலத்த காயமடைந்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சசிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேத்துப்பட்டு ஆரணி சாலையில் மேல்வில்வராய நல்லூர் பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் ராஜபக்னேஸ்வரர் அவருடைய நண்பர் சென்னையில் பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய இருவரும் எதிரே வந்த வேனில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
நேற்று இரவு மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்த துளசி என்பவர் தன்னுடைய பேத்தி திருமணத்திற்கு சேத்துப்பட்டு வந்து ஆரணி சாலையில் நடந்து பஜாருக்கு சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 10:30 மணி அளவில் ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த லாரியில் இடையங் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மரவியாபாரி பலராமன் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் அடுத்தடுத்து 24 மணி நேரத்தில் 3 விபத்தில் 5 பேர் பலியானதில் சேத்துப்பட்டு போலீசார் செய்வதறியாது திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.