April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

1 min read

Cannot order allocation of Bambaram symbol- Madras High Court scheme

27/3/2024
மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்க முடியாது என்றும் ஒரே மாநிலத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் தான் ஒதுக்கீட்டு சின்னம் ஒதுக்க முடியும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அங்கீகாரம் ரத்தாகும் பட்சத்தில் சின்னத்தை பொது சின்னமாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். ஆனால், பம்பரம் சின்னம் பொது சின்னமாக அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மற்ற மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட தயார் என மதிமுக வாதம் செய்தது.

ஆனால், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறி தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.