April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு : ஸ்டாலின் பேச்சு

1 min read

Caste wise enumeration if there is an India coalition government at the centre: Stalin’s speech

29.3.2024
மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தர்மபுரி பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

லோக்சபா தேர்தலையொட்டி தர்மபுரி , கிருஷ்ணகிரி தி.மு.க., கூ்டடணி வேட்பாளர்கள் ஆ.மணி, கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தி.மு.க, தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பேசியதாவது:-

நடக்கவிருப்பது இந்திய வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல். இதனை மக்கள் உணர வேண்டும். தர்மபுரி தி.மு.க, வேட்பாளர் ஆ.மணி ஆற்றல் மிகு தொண்டர், கிருஷ்ணகிரி காங்., வேட்பாளர் கோபிநாத் உங்களுக்கு தெரிந்தவர்.

சமத்துவம் என்றால் என்ன என கேட்கும் கட்சி பா.ஜ., சமூகநீதி பேசக்கூடிய ராமதாஸ் பா.ஜ.வுடன் கூட்டணி யில் இணைந்தது ஏன் ? சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் உத்தரவாதம் பெற்றாரா? ராமதாஸ். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தியது தி.மு.க., மக்களின் நலனுக்காகவே பாடுபடும் கூட்டணி ‛‛ இந்தியா கூட்டணி ”.

நான் நடத்தும் 2-வது உலகப்போர் இது இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் ஓட்டு ஜனநாயகத்திற்கு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு அளிக்கும் வாய்ப்பு
நீங்கள் அளிக்கும் ஓட்டு ஜனநாயகத்திற்கும், தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் அளிக்கும் வாய்ப்பு, இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட பா.ஜ.,வை வீட்டு அனுப்பி, இண்டியா கூட்டணியை நீங்கள் ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.

தி.மு.க. அரசு தான் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தது. சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி பா.ஜ., அரசியமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும் என்றால் பா.ஜ.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நாட்டை சாதி, மத. இன, மொழி அடிப்படையில் பிளவு படுத்தி குளிர்காய நினைப்பது பா.ஜ., கட்சி தான். சாதிவாரி கணக்கெடுப்புக்கு முட்டு போட்டது பா.ஜ., . தன்னை சாமானியனாக அறிவித்து சாமானியருக்காக ஆட்சி நடத்தியவர் கலைஞர் கருணாநிதி.

மகளிர் உரிமை தொகையை தாய்வீட்டு சீதனம் என பெண்கள் கொண்டாடுகின்றனர். அரசின் திட்டத்தால் பள்ளி குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை பயனடைகின்றனர்.

பா.ஜ.வை போல யாரும் விவசாயிகளுக்கு கொடுமை செய்திருக்கமுடியாது. மாநிலங்களின் அதிகாரங்களை அழிக்க துடிக்கிறார் மோடி. மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுக்கு ஒரு முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரியில் ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னதை செய்த பெருமையோடு உங்கள் முன் நிற்கிறேன். சமூகநீதியை காப்பாற்றுகின்றன அரசை அமைக்க இண்டியா கூட்டணியை வலுவாக அமைத்துள்ளோம். சமூக நீதி காக்க, சமுத்துவம் தழைக்க நீங்கள் இண்டியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.. இந்த தேர்தலில் மக்கள் பா.ஜ.,வை ஒதுக்கத்தான் போகிறார்கள். நாற்பதும் நமதே.

தேர்தலில் போட்டியிட பணம் இல்லைஎன நிதியமைச்சர் கூறி வருகிறார் தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த பணத்தை தர முடியாது என பா.ஜ. கூறி விட்டதா? மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது தெரிந்து நிர்மலா சீதாராமன் தப்பித்து விட்டார்.

தேர்தலுக்காகத்தான் பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளார் பிரதமர். மாநிலங்களின் அதிகாரத்தை அழிக்க நினைக்கிறார் பிரதமர். பிரதமர் மோடி எஜமானர் அல்ல. மக்கள் தான் பிரதமருக்கு எஜமானார்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.