April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

பில் கேட்ஸ்க்கு “தூத்துக்குடி முத்து” பரிசளித்த பிரதமர் மோடி

1 min read

Prime Minister Modi gifted “Tuticorin Pearl” to Bill Gates

29.3.2024
பிரதமர் மோடி உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உடன் ஏய் (AI) முதல் டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது வரையிலான பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடினார்.

உரையாடல் முடிவில் பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ் ஊட்டசத்து தொடர்பான புத்தகங்களை பரிசாத வழங்கினார். அதற்குப் பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை பரிசாக வழங்கினார்.

உள்நாட்டிற்கு தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் “Vocal for Local” என்பதை வலியுறுத்தும் வகையில் பரிசு பொருட்கள் அமைந்திருந்தது.

அதில் ஒன்று தூத்துக்குடி முத்து ஆகும். தூத்துக்குடி முத்தை பில் கேட்ஸ்க்கு பரிசளித்த பிரதமர், இது தூத்துக்குடி முத்து. தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் முத்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இங்குள்ள மீனவர்கள் இந்த தொழில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்றார்.
இந்த உரையாடலின்போது “AI மிகவும் முக்கியமானது. சில நேரங்களில் நான் நகைச்சுவைக்காக, எங்களுடைய நாட்டில், நாங்கள் எங்களுடைய தாயாரை ஏய் (Aai) என அழைப்போம். தற்போது நான் சொல்கிறேன், குழந்தைகள் பிறக்கும்போது அவன் ஏய் (Aai) என சொல்கிறான். அதுபோன்று AI குழந்தைகள் முன்னேறிவிட்டன என்பேன்” எனத் தெரிவித்தார்.
அவர் பில் கேட்ஸை NaMo செயலி மூலம் ஒரு செல்ஃபி எடுக்கச் சொன்னார், பின்னர் அதை முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு கண்டறியலாம் என்பதைக் காட்டினார்.

மேலும், AI டூல்ஸ் மூலம் பல்வேறு டீப்ஃபேக் உருவாக்கப்படுகிறது. தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.