அதிகாரிகள் மீது தென்காசி பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன் புகார்
1 min read
Tenkasi BJP candidate Janpandian complains against the official
2.4.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஜான்பாண்டியன் சில அதிகாரிகள் தனது பிரச்சாரத்தை தடுக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனுவினை அளித்தார்
அந்த மனுவில்நான் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறேன் என்னுடைய சமூக வலைத்தள கணக்குகளில் நான் மேற்கொள்ளும் தேர்தல்பிரச்சாரத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக கூறி என்னை விசாரணைக்கு அழைத்தார்கள் ஆனால் இப்படி எதுவுமே என் சமூக வலைதளங்களில் இல்லை திமுகவின் தூண்டுதலின் பேரில் இந்த விசாரணைக்கு என்னை அழைத்து என் பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்ய வைத்த
பி ஆர் ஓ மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவினை செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில்தென்காசி பாராளுமன்ற பாஜக பொறுப்பாளர் மகாராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.